/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தமிழக சுற்றுலா வேன் கவிழ்ந்து 17 பேர் காயம்
/
தமிழக சுற்றுலா வேன் கவிழ்ந்து 17 பேர் காயம்
ADDED : மே 05, 2024 03:39 AM

மூணாறு, : இடுக்கி மாவட்டம் ஆனச்சால் தோக்கு பாறை பகுதியில் தமிழக சுற்றுலா வேன் விபத்தில் சிக்கி 17 பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
தமிழகம் திருச்சியைச் சேர்ந்த சிறுவர்கள் உள்பட 17 பேர் கொண்ட குழு வேனில் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர்.
அவர்கள் நேற்று மூணாறில் இருந்து திருச்சூர் புறப்பட்டனர். ஆனச்சால் தோக்குபாறை பகுதியில் கடும் வளைவில் வேன் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை கடந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. அங்கு மரத்தில் மோதி வேன் நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வேனில் சென்ற 17 பேரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவம் நடந்தபோது அந்த வழியில் மூணாறை நோக்கி வந்த இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ், மோட்டார் வாகன துறை அதிகாரிகள் ஆகியோர் மீட்டு பணிகளை துரிதப்படுத்தினர். அடிமாலி தாலுகா மருத்துவமனையில் காயம் அடைந்த அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.