/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் 950 எக்டேரில் கோடை சாகுபடிக்கு இலக்கு! விவசாயிகள் மண் பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்
/
மாவட்டத்தில் 950 எக்டேரில் கோடை சாகுபடிக்கு இலக்கு! விவசாயிகள் மண் பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்
மாவட்டத்தில் 950 எக்டேரில் கோடை சாகுபடிக்கு இலக்கு! விவசாயிகள் மண் பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்
மாவட்டத்தில் 950 எக்டேரில் கோடை சாகுபடிக்கு இலக்கு! விவசாயிகள் மண் பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்
ADDED : ஏப் 09, 2024 12:25 AM
தேனி : தேனி மாவட்டத்தில் கோடை காலத்தில் எள், உளுந்து, கடலை ஆகியவை 950 எக்டேர் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கோடை உழவு, மண் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, தென்னை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது கோடை காலம் துவங்கி விட்டதால் பல இடங்களில் தண்ணீர் இன்றி விவசாய நிலங்கள் காய்ந்து காணப்படுகின்றன. இந்நிலையில் வேளாண் துறை சார்பில் தண்ணீர் உள்ள இடங்களில் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி உளுந்து, எள், கடலை பயிர்கள் 950 எக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் உளுந்து 250, கடலை 200, எள் 500 எக்டேர்களில் சாகுபடி செய்ய உள்ளது. இதற்காக வட்டாரங்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் விதைகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது உளுந்து விதை கையிருப்பு உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் கோடைகாலத்தில் சில வட்டாரங்களில் மட்டும் நீர் உள்ளதால் நெல், மற்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் குறைந்த அளவு நீர் உள்ளது. இந்த பகுதியில் உணவு உற்பத்தியை அதிகரிக்க கடலை, எள், உளுந்து பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வகை பயிர்கள் பயிரிடுவதால் நிலங்களில் நைட்ரஜன் சத்து நிலை நிறுத்தப்படும். அடுத்து பயிரிடக்கூடிய பயிர்களுக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கும். கோடை சாகுபடி செய்யாத விவசாயிகளிடம் கோடை உழவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. கோடை உழவு செய்வதால் மண்வளம் கூடுகிறது.
மேலும் மண்ணில் தீங்கு செய்ய கூடிய பூஞ்சைகள் இறந்து விடும். அதே சமயம் மண், நீர் பரிசோதனை செய்ய வேளாண் அலுவலர்கள் மூலம் விவசாயிகளிடம் அறிவுறுத்தி வருகிறோம். மண் பரிசோதனை செய்வதால், மண்ணில் உள்ள சத்துக்களை அறிந்து கொள்ள இயலும். இதனால் அடுத்த பயிர் சாகுபடி செய்யும் போது, எவ்வளவு உரம் ஈட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். மாவட்டத்தில் பல இடங்களில் பொட்டாஷ் சத்து அதிகம் உள்ளது. இதனால் விவசாயிகள் பொட்டாஷ் உரத்தை குறைத்து பயன்படுத்தலாம் என்றனர்.

