ADDED : ஜூலை 17, 2024 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : பெரியகுளம் கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் வருடாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி வருடாபிேஷகம் நடந்தது. கைலாசநாதர், அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வருடாபிஷேக ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.