/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு தடை செய்த பொருட்களை கடைகளில் விற்பதை தவிர்க்கனும் சிறு பலசரக்கு வியாபாரிகள் சங்க செயலர் அறிவுரை

ADDED : ஆக 29, 2024 08:48 AM

தேனி: அரசு தடை செய்த பொருட்களை கடைகளில் விற்பனை செய்வதை வியாபாரிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட சிறு பலசரக்கு வியாபாரிகள் சங்க செயலாளர் ஆத்தியப்பன் பேசினார்.
தேனி மாவட்ட சிறுபலசரக்கு வியாபாரிகள் சங்க 20ம் ஆண்டு விழா தேனி காமராஜர் நகரில் உள்ள சங்க கட்டடத்தில் நடந்தது. சங்க தலைவர் பழனிசாமி, துணைத்தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். சங்க துணை செயலாளர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஆரோக்கியபிச்சை வரவேற்றார்.
சங்க செயலாளர் ஆத்தியப்பன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை சங்க நிர்வாகிகள் கவுரவித்தனர். சங்க செயலாளர் ஆத்தியப்பன் பேசுகையில், ' அரசு தடை செய்த பொருட்களை கடைகளில் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். நல்ல பொருட்களை வாங்கி விற்பது பெருமைப்படும் செயலாகும். நம் முன்னோர்கள் வழிகாட்டிய பாரம்பரிய சத்தான உணவுகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் கல்வியை ஊக்குவித்து, போட்டித்தேர்வுகள் எழுத தன்னம்பிக்கை அளிக்க வேண்டும். வரும் காலங்களில் நமது குழந்தைகள் நன்கு படித்து அரசின் போட்டி தேர்வுகளில் பங்கேற்று அரசு பதவிகளுக்கு செல்ல உற்சாகப்படுத்த வேண்டும் என்றார். சங்கத்தின் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.