/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முதல் போகத்திற்கான விதை நெல் தேர்வில் வேளாண் துறை மவுனம் குறுகிய கால பயிர்கள் பரிந்துரை வேண்டும்
/
முதல் போகத்திற்கான விதை நெல் தேர்வில் வேளாண் துறை மவுனம் குறுகிய கால பயிர்கள் பரிந்துரை வேண்டும்
முதல் போகத்திற்கான விதை நெல் தேர்வில் வேளாண் துறை மவுனம் குறுகிய கால பயிர்கள் பரிந்துரை வேண்டும்
முதல் போகத்திற்கான விதை நெல் தேர்வில் வேளாண் துறை மவுனம் குறுகிய கால பயிர்கள் பரிந்துரை வேண்டும்
ADDED : மே 15, 2024 07:03 AM
கம்பம் : முதல் போகத்திற்கான விதை நெல் தேர்வு செய்ய விவசாயிகளுக்கு தேவையான விபரம்,அறிவுரைகள் வழங்காமல் வேளாண் துறையினர் மவுனம் சாதிக்கின்றனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி முல்லைப் பெரியாறு பாசனத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
நெல் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில் நுட்பங்களை வேளாண் துறை விவசாயிகளுக்கு கூறற அதிகாரிகளே இன்னமும் தயார் ஆகாமல் உள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் ஆண்டுதோறும் விதை நெல் தேர்வில் கோட்டை விட்டு, விவசாயிகள் அறுவடை சமயத்தில் புலம்புவார்கள். இதை வேளாண் துறையினர் கண்டு கொள்ள மாட்டார்கள்.
இந்தாண்டு முதல் போகத்திற்கு வேளாண் துறை ஆர். என் .ஆர் மற்றும் கோ 55 என்ற ரகங்களை விற்பனை செய்கிறது.
கடந்தாண்டு இரண்டு போகங்களிலும் ஆர். என்.ஆர். நல்ல மகசூல் தந்ததால், விவசாயிகள் முதல் போகத்திற்கும் ஆர்.என். ஆர். விதை நெல் வாங்குகின்றனர். வேளாண் துறை அலுவலகங்களில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
ஆர்.என்.ஆர். ரகம் 125 நாட்களாகும். தற்போதுள்ள சூழலில் ஜுன் முதல் தேதி தண்ணீர் திறந்தாலும், ஜூலையில் தான் நடவாகும். அக்டோபரில் தான் அறுவடை செய்ய முடியும். அக்டோபர் பருவ மழை காலமாகும். அறுவடைக்கு சிக்கல் ஏற்படும். பொதுவாக முதல் போகத்திற்கு குறுகிய கால பயிர்களே சிறந்தது என்று வேளாண் துறையே கூறுகிறது - ஆனால் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் வட்டாரங்களில் பெரும்பாலோர் 125 நாட்கள் கொண்ட ஆர். என்.ஆர். ரகத்தை தேர்வு செய்துள்ளனர். கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் வட்டார வேளாண் துறையினரும் ஆர். என் ஆர். ரக விதைகளை வழங்கி வருகின்றனர்.
கால சூழல், மகசூல், சீதோஷ்ண நிலை, அறுவடை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து ரகத் - தேர்வுக்கு விவசாயிகளை தயார் படுத்த - வேண்டிய பொறுப்பும், கடமையும் வேளாண் துறைக்கு உள்ளது.
அதை செய்ய வேண்டிய வேளாண் துறையினர் மவுனம் சாதிக்கின்றனர்.

