/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளிக் கல்வித்துறையில் கல்லுாரி கனவு நிகழ்ச்சி மே 15ல் நடக்கிறது
/
பள்ளிக் கல்வித்துறையில் கல்லுாரி கனவு நிகழ்ச்சி மே 15ல் நடக்கிறது
பள்ளிக் கல்வித்துறையில் கல்லுாரி கனவு நிகழ்ச்சி மே 15ல் நடக்கிறது
பள்ளிக் கல்வித்துறையில் கல்லுாரி கனவு நிகழ்ச்சி மே 15ல் நடக்கிறது
ADDED : மே 09, 2024 05:53 AM
தேனி: அரசுப் பள்ளியில் படித்து பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்லுாரிக்கனவு நிகழ்ச்சி மே 15ல் தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது.
மாவட்டத்தில் உள்ள 70 அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு கல்லுாரிக்கனவு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இதில் பங்கேற்க கல்லுாரி செல்ல வசதி குறைவான மாணவர்கள், விருப்பமில்லா மாணவர்களை கண்டறிந்து அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வில் கல்லுாரிகளில் உள்ள பாடப் பிரிவுகள், வேலை வாய்ப்புகள் பற்றி எடுத்துரைக்க பட உள்ளன.
நிகழ்ச்சியில் பங்கேற்க 70 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, ஐ.டி.ஐ.,க்களில் நேரடி சேர்க்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.