/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குற்றவாளி முகத்தை'ஸ்கேன்' செய்யும் கேமராக்கள் பயன்படுத்த முடிவு வீரபாண்டி திருவிழாவில் திருட்டை தடுக்க முயற்சி

ADDED : மே 01, 2024 08:05 AM
தேனி : வீரபாண்டி திருவிழாவில் முகத்தை ஸ்கேன் செய்யும் கேமராக்கள் பயன்படுத்த போலீசார் ஆலோசித்து வருகின்றனர். இதன் மூலம் கூட்டத்தில் கேமராவில் சிக்கும் குற்றவாளிகளை கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 7 முதல் மே 14 வரை நடக்கிறது. திருவிழாவிற்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தென்மாவட்டகளில் இருந்தும்,கேரளாவில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படைவசதிகளில் கூடுதல் கவனம் செலுத்த மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மக்கள் அதிகம் கூடும் தற்காலிக பஸ் ஸ்டாண்ட், ராட்டினம் அமையும் மைதானம், கோயில் சுற்றுப்புறம், ஆற்றப்பாலங்கள், பைப்பாஸ், பார்க்கிங் களில் ஹிந்து அறநிலையத்துறை, போலீசார் இணைந்து கூடுதல் கேமராக்கள் நிறுவன திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் திருட்டு, வழிப்பறி, உள்ளிட்ட சம்பவங்கள தடுக்க போலீசார் மாறுவேடத்தில் 24 மணிநேரமும் கூட்டத்தில் சுற்றிவர உள்ளனர்.
பாதுகாப்புபணிகள் பற்றி போலீசார் கூறுகையில், திருவிழாவில் 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கூட்டத்தை கண்காணிக்க 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது. இம் முறை புதிய முயற்சியாக முகங்களை ஸ்கேன் செய்யும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த கேமராக்கள் தனி 'சாப்டூவேரில்' இணைக்கப்பட்டிருக்கும். இந்த சாப்டூவேரில் ஏற்கனவே குற்ற செயல்களில் சிக்கி உள்ள குற்றவாளிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். குற்றவாளிகள் திருவிழாவிற்கு வந்து கேமராக்களில் சிக்கும் போது, அவர்கள் இருக்கும் இடம் பற்றி போலீசாருக்கு தகவல் தரும். உடனே பழயை குற்றவாளிகளை போலீசார் தொடர்ந்து கண்காணிப்பர். இக் கேமராக்கள் இரவிலும் துல்லியமாக செயல்படும் வகையில் பொருத்தப்படுவதால் திருட்டு சம்பவங்கள் வெகுவாக குறையும். என்றனர்.