/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எதிர் எதிரே நின்ற காட்டு யானைகள்; சமாளிக்க போராடும் வனத்துறை
/
எதிர் எதிரே நின்ற காட்டு யானைகள்; சமாளிக்க போராடும் வனத்துறை
எதிர் எதிரே நின்ற காட்டு யானைகள்; சமாளிக்க போராடும் வனத்துறை
எதிர் எதிரே நின்ற காட்டு யானைகள்; சமாளிக்க போராடும் வனத்துறை
ADDED : செப் 05, 2024 04:53 AM
மூணாறு: மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் லோயர் டிவிஷனில் நேற்று நிலை கொண்ட படையப்பா, ஒற்றை கொம்பன் காட்டு யானைகளை சமாளிக்க வனத்துறையினர் கடுமையாக போராடினர்.
மூணாறு அருகே சின்னக்கானல் பகுதியில் சக்கை (பலாப்பழம்) கொம்பன் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த முறிவாலன் (முறிந்த வால்) கொம்பன் ஆக.31 நள்ளிரவில் இறந்தது. அச்சம்பவத்திற்கு பிறகு மூணாறு அருகே நயமக்காடு எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் பிரபல படையப்பா மற்றும் ஒற்றை கொம்பன் ஆகிய ஆண் காட்டு யானைகள் பலமாக மோதிக் கொண்டன. வனத்துறையினர் இரண்டு யானைகளையும் பிரித்து இணைய விடாமல் கண்காணித்தனர்.
இந்நிலையில் மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் லோயர் டிவிஷன் பகுதியில் இரண்டு யானைகளும் நேற்று காலை முதல் சிறிய தூரம் இடைவெளியில் எதிர், எதிரே நிலை கொண்டன. அவற்றை வனத்துறையின் யானை தடுப்பு பிரிவினர் தீவிரமாக கண்காணித்தனர்.
இந்நிலையில் ஒற்றை கொம்பன் மாலை 6:00 மணிக்கு குடியிருப்பு பகுதிக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யானை தடுப்பு பிரிவினர் பட்டாசு வெடித்து ஒற்றை கொம்பனை விரட்டிய நிலையில், இரண்டு யானைகளையும் சமாளிக்க கடுமையாக போராடினர்.