/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூதாட்டியிடம் தாலிச்செயின் பறிப்பு
/
மூதாட்டியிடம் தாலிச்செயின் பறிப்பு
ADDED : ஆக 22, 2024 03:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அல்லிநகரம் நேருஜீ ரோடு துரைராசு 78. இவரது மனைவி முனீஸ்வரியுடன் 72, வசிக்கிறார். இவர் வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு ஆக., 19ல் மாலையில் சென்றிருந்தார்.
மனைவி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது வீட்டில் புகுந்த மர்ம நபர் தாலிச்செயினை இழுத்தார். மனைவி, நகையை பிடித்துக் கொண்டு கூச்சலிட, மர்ம நபர் பாதி செயினுடன் தப்பித்துச் சென்றார். இதில் முனீஸ்வரி அணிந்திருந்த ஏழு பவுன் தாலியில் முக்கால் பவுன் நகை மர்ம நபர் கையில் சிக்கியது.
மீதி நகை கழுத்தில் இருந்தது.துரைராசு புகாரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.