/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி முந்தலில் பறவை காய்ச்சல் முகாம் அமைத்திருப்பது ஏன் அச்சத்தில் கிராமப் பகுதி மக்கள்

ADDED : ஏப் 22, 2024 05:50 AM
போடி, : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதை தடுக்க கேரளா எல்லை பகுதியான போடிமெட்டில் கால்நடை துறையினர் மூலம் முகாம் அமைக்காமல், முந்தலில் அமைத்து உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
கேரளாவில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தடுக்கும் வகையில் தமிழக, கேரளாவை இணைக்கும் பகுதியான, வாகன போக்குவரத்து அதிகம் உள்ள குமுளி, கம்பம்மெட்டு பகுதியில் கால்நடைத் துறையினர் மூலம் முகாம் அமைத்து உள்ளனர். இதுபோல தமிழக கேரள மாநில எல்லைப் பகுதியான போடிமெட்டில் பறவை காய்ச்சல் தடுப்பு சோதனை முகாம் அமைக்காமல் 20 கி.மீ., தூரம் கடந்து போடி அருகே முந்தல் ரோட்டில் முகாம் அமைத்து உள்ளனர். வரும் வாகனங்களை சோதனைகளுக்கு உட்படுத்தி கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். இதனால் போடிமெட்டு, முந்தல் மலை கிராம மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.