/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்தவர் கைது
/
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்தவர் கைது
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்தவர் கைது
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்தவர் கைது
ADDED : ஏப் 30, 2024 10:41 PM

பழனிசெட்டிப்பட்டி:தேனி லோக்சபா தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்க கல்லுாரியில் பாதுகாக்கப்படுகிறது. இம்மையத்தில் துணை ராணுவப்படையினர், ஆயுதப்படை மற்றும் உள்ளூர் போலீசார் என, 250 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பிற்காக 200 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஓட்டு எண்ணும் மைய வளாகத்திற்குள் நேற்று முன்தினம், தேனி மாவட்டம் சீப்பாலக்கோட்டையை சேர்ந்த ராஜேஷ்கண்ணன், 27, என்பவர், டூ - வீலரில் உள்ளே நுழைந்தார்.
அவரை தடுத்து விசாரித்த வி.ஏ.ஓ., மதுக்கண்ணன் மற்றும் போலீசாரிடம், தனக்கு தெரிந்தவர்கள் அங்கு பணி புரிவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
பழனிசெட்டிப்பட்டி போலீசார் ராஜேஷ் கண்ணனை கைது செய்தனர்.