/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மந்த நிலை விசைத்தறிகளில் உற்பத்தியாகும் கலர் வேஷ்டி விற்பனை உற்பத்தியாளர்கள் வேலை நேரத்தை குறைவால் பாதிப்பு
/
மந்த நிலை விசைத்தறிகளில் உற்பத்தியாகும் கலர் வேஷ்டி விற்பனை உற்பத்தியாளர்கள் வேலை நேரத்தை குறைவால் பாதிப்பு
மந்த நிலை விசைத்தறிகளில் உற்பத்தியாகும் கலர் வேஷ்டி விற்பனை உற்பத்தியாளர்கள் வேலை நேரத்தை குறைவால் பாதிப்பு
மந்த நிலை விசைத்தறிகளில் உற்பத்தியாகும் கலர் வேஷ்டி விற்பனை உற்பத்தியாளர்கள் வேலை நேரத்தை குறைவால் பாதிப்பு
ADDED : செப் 13, 2024 05:54 AM
ஆண்டிபட்டி, செப்.13- - சக்கம்பட்டியில் உற்பத்தியாகும் கலர் வேஷ்டிகள் விற்பனை மந்த நிலை ஏற்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் வேலை நேரத்தை குறைத்துள்ளனர். வேலை இழப்பால் நெசவாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறிகளில் காட்டன் ரக சேலைகள், கலர் வேஷ்டிகள் அதிகம் உற்பத்தி ஆகிறது. இப்பகுதியில் உற்பத்தியாகும் வேஷ்டிகள் ஈரோடு ஜவுளி சந்தைக்கும், தமிழகம் மற்றும் கேரளாவிற்கும் விற்பனைக்கு அதிகம் அனுப்பப்படுகிறது. காட்டன் ரக சேலைகள் விற்பனை விறுவிறுப்பாக உள்ள நிலையில் விசைத்தறிகளில் உற்பத்தியாகும் கலர் வேஷ்டிகள் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. விற்பனை மந்த நிலையால் தொடர்ந்து உற்பத்தி செய்து இருப்பில் வைக்க உற்பத்தியாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இச் சூழலால் விசைத்தறிக்கூடங்களில் நெசவாளர்களுக்கான வேலை நேரத்தை குறைத்துள்ளது. இதனால் இத்தொழிலை நம்பி உள்ள நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது.
விலையை உயர்த்த முடியவில்லை
விசைத்தறி கலர் வேஷ்டி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: சக்கம்பட்டி விசைத்தறிகளில் ஈரிழை, அவதார் வேஷ்டிகள் நீலச்சலவை, பால் சலவை, ஆலிவ், சுடர், புளு, பச்சை, காவி உள்பட பல வகை கலர் வேஷ்டிகள் உற்பத்தி ஆகின்றன. தற்போது ரூ.100 முதல் 150 வரை விலை உள்ள வேஷ்டிகள் விற்பனைக்கு உள்ளன. நூல், மூலப்பொருட்கள் விலை உயர்வால் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. விலையை உயர்த்தி விற்க முடியவில்லை. உற்பத்தி செய்து இருப்பில் வைத்து விற்பனை செய்வதால் நஷ்டம் ஏற்படுகிறது. இன்னும் சில வாரங்களில் தீபாவளி பண்டிகை துவங்க உள்ள நிலையில் தற்போதுள்ள விற்பனை மந்தம் சரியாகி விடும். வேஷ்டி விற்பனை அதிகமானால் நெசவாளர்களுக்கான வேலை நேரம் மீண்டும் அதிகரிக்கும் என்றனர்.
வேலை இழப்பை ஈடு செய்ய வேண்டும்
விசைத்தறி நெசவாளர்கள் கூறுகையில்,' கலர் வேஷ்டிகள் அனைத்தும் விசைத்தறிக்கூடங்களில் தான் உற்பத்தியாகிறது. நெசவாளர்கள் தனியாக உற்பத்தி செய்து விற்பனை செய்ய இயலாது. இதனால் விசைத்தறி உரிமையாளர்களின் நிபந்தனையை ஏற்க வேண்டி உள்ளது. தற்போது ஏற்படும் வேலை நஷ்டத்தை வாய்ப்பு கிடைக்கும்போது கூடுதலாக உற்பத்தி செய்து ஈடு செய்ய வேண்டும் இவ்வாறு தெரிவித்தனர்.