/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டியில் தென்றலாக வரும் தென்மேற்கு பருவக்காற்று
/
ஆண்டிபட்டியில் தென்றலாக வரும் தென்மேற்கு பருவக்காற்று
ஆண்டிபட்டியில் தென்றலாக வரும் தென்மேற்கு பருவக்காற்று
ஆண்டிபட்டியில் தென்றலாக வரும் தென்மேற்கு பருவக்காற்று
ADDED : மே 26, 2024 04:30 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்றலாக வரும் தென்மேற்கு பருவக்காற்று பலருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் கோடை வெயில் அனைவரையும் வாட்டி வதைத்தது. பகலில் வெயில், இரவில் புழுக்கத்தால் பொதுமக்கள் தூக்கம் இன்றி தவித்தனர். மே 4 ல் துவங்கிய கத்தரி வெயிலால் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டது. கத்தரி வெயில் துவங்கிய அடுத்த மூன்று நாட்களில் ஆண்டிபட்டி பகுதியில் கோடை மழையும் துவங்கியதால் வெயிலின் தாக்கம் மறைந்தது. கோடை மழைக்கான சூழல் இன்னும் தொடர்வதால் குளிர்ச்சியான சீதோஷ்ணத்துடன் தென்மேற்கு பருவக்காற்றும் துவங்கியுள்ளது. கோடை மழையால் ஆண்டிபட்டி பகுதியில் குளங்கள், கண்மாய்களில் நீர் தேங்கவில்லை என்றாலும் புல் பூண்டுகள், மரம் செடி கொடிகள் புத்துணர்வு பெற்று பசுமையாக காட்சியளிக்கிறது. குளிர்ச்சி கலந்து தென்றலாக வரும் தென்மேற்கு பருவக்காற்று அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.