/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவியின் தந்தை கைது விசாரிக்க சென்ற தாசில்தாருக்கு காயம்

ADDED : ஜூன் 14, 2024 05:26 AM
தேனி: தேனி ஆர்.சி., பள்ளியில் மாணவிக்கு மாற்று சான்றிதழ் தர வலியுறுத்தி பெண் தலைமை ஆசிரியரையும், அவரது கணவரான தாசில்தாரையும் தாக்கிய தேனி பாரஸ்ட் ரோடு ராஜபாண்டியனை 35, போலீசார் கைது செய்தனர்.
தேனி அன்னஞ்சி விலக்கு என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் ஜஸ்டின் சாந்தப்பா. கலெக்டர் அலுவலக மேலாளராக உள்ளார். இவரது மனைவி ஜோஸ்பீன் 54. இவர் தேனி ஆர்.சி., உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணிபுரிகிறார். நேற்று தேனி பாரஸ்ட் ரோட்டை சேர்ந்த ராஜபாண்டியன் 35, என்பவர் மது போதையில் பள்ளிக்கு வந்து அங்கு ஏழாம் வகுப்பு படிக்கும் தனது மகளின் மாற்றுச் சான்றிதழ் வழங்க கோரி வலியுறுத்தி தகராறு செய்தார். தலைமை ஆசிரியை, மாற்று சான்றிதழ் பெற உரிய பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள கூறினார். என்னிடமே பணம் கேட்கிறாயா' என கூறிய ராஜபாண்டியன், தலைமை ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டார். இது குறித்து தலைமை ஆசிரியர் தனது கணவர் ஜஸ்டின் சாந்தப்பாவிற்கு அலைபேயில் தகவல் தெரிவித்தார்.
பள்ளிக்கு சென்று விசாரித்த ஜஸ்டின் சாந்தப்பாவை ராஜபாண்டியன் சாவியால் தலையில் குத்தி ரத்தக்காயம் ஏற்படுத்தினார். தகராறை விலக்கி விட சென்ற தலைமை ஆசிரியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தலைமை ஆசிரியை புகாரில் தேனி எஸ்.ஐ., மாயன் தகராறு செய்த ராஜபாண்டியனை கைது செய்தனர்.