/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெங்களூரு சென்ற ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
/
பெங்களூரு சென்ற ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
ADDED : ஆக 22, 2024 03:28 AM

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பயன்பாட்டு காலம் முடிவடைந்த, பழுதடைந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெங்களுரூவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பும் பணி நடந்தது.
தேர்தல் ஆணையத்திற்கு பெல் நிறுவனம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாரித்து வழங்குகின்றன. இயந்திரங்களின் ஆயுட்காலமாக 15 ஆண்டுகள் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்பட்டி 2008, 2009ல் தயாரிக்கப்பட்ட எம் 2 வகை ஓட்டுப்பதிவு இயந்திரங்களை திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்தது.
தேனி மாவட்டத்தில் எம் 2 வகை இயந்திரங்கள் ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரம், பகவதிஅம்மன் கோயில் தெரு, கலெக்டர் அலுவலகத்தில் 4 தளத்தில் உள்ள பாதுகாப்பு அறை 3 இடங்களில் கட்டுப்பாட்டு கருவிகள் 422, பேலட் யூனிட் 1841 வைக்கப்பட்டிருந்தன. அதனை சில வாரங்களுக்கு முன் அதிகாரிகள் ஸ்கேன் செய்து சரிபார்த்தனர்.
இவற்றை பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பும் பணி நேற்று நடந்தது. இதனுடன் கடந்த லோக்சபா தேர்தலில்பழுதான 2 கட்டுப்பாடு கருவிகள், 8 வி.வி., பேட் அனுப்பப்பட்டன.
தேர்தல் பிரிவு அதிகாரிகள், ஊரக வளர்ச்சிபிரிவு அதிகாரிகள் மேற்பார்வையில் லாரிகளில் ஏற்றும் பணி நடந்தது. அரசியல் கட்சியினர்பங்கேற்றனர்.