ADDED : மே 12, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே சாத்தாகோவில்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் கவுசல்யா 21.
அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் 40. மதுபோதையில் கவுசல்யா வீட்டிற்கு முன் அவதூறாக பேசியுள்ளார். இது குறித்து கேட்ட கவுசல்யா தாயாரை திட்டியும், கவுசல்யாவை மட்டையால் அடித்து காயப்படுத்தினார். பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கவுசல்யா கொண்டு செல்லப்பட்டார். எஸ்.ஐ., தேவராஜ், பெருமாளை கைது செய்தார்.
--