ADDED : ஜூலை 20, 2024 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கேரளா இடுக்கி மாவட்டம் பீர்மேடு பட்டுமலையை சேர்ந்தவர் ராஜேஷ் 37.
இவர் அங்குள்ள தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று காலை தேயிலை பதப்படுத்தும் இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது எதிர்பாராவிதமாக இயந்திரம் இயங்கியதால் தலை சிக்கியது. மற்ற தொழிலாளர்கள் உடனடியாக இயந்திரத்தை நிறுத்தி ராஜேசை மீட்டு, பீர்மேடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். வண்டிப்பெரியாறு போலீசார் விசாரித்து வருகிறனர்.