/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி தொடர் கட்டட பகுதி: தமிழக அரசு அனுமதி
/
தேனி தொடர் கட்டட பகுதி: தமிழக அரசு அனுமதி
ADDED : ஜூன் 26, 2024 07:45 AM
போடி: தேனி மாவட்டம் போடி உள்ளூர் திட்ட குழுமத்தில் நகராட்சி பகுதிகளை தொடர் கட்டடப் பகுதிகளாக அறிவிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கட்டட பகுதிகளை புதிதாக அறிவிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ளது போன்று பிற மாவட்டங்களிலும் தொடர் கட்டட பகுதிகளை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில் தேனி மாவட்டம் போடியை உள்ளூர் திட்ட குழுமத்தில் தொடர் கட்டட பகுதிகளை வரையறுப்பதற்கான ஆய்வுகள் நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.
இதில் தெரிய வந்த விபரங்கள் அடிப்படையில், உள்ளூர் திட்ட குழுமத்துக்கான முழுமை திட்டத்தில் திருத்தங்களை டி.டி.சி.பி., பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரைகள் அடிப்படையில் தேனி மாவட்டம் போடி உள்ளூர் திட்ட குழுமத்தில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தொடர் கட்டட பகுதிகள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான பகுதிகளை அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த டி.டி.சி.பி., பரிந்துரைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான அரசாணையை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறைச் செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.