/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொலை முயற்சி வழக்கில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு 7 ஆண்டு சிறை
/
கொலை முயற்சி வழக்கில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு 7 ஆண்டு சிறை
கொலை முயற்சி வழக்கில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு 7 ஆண்டு சிறை
கொலை முயற்சி வழக்கில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு 7 ஆண்டு சிறை
ADDED : ஏப் 23, 2024 06:42 AM

பெரியகுளம் : கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கண்டித்து அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற மகன்கள், தந்தை மீது பெரியகுளம் சார்பு நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
பெரியகுளம் அருகே குள்ளப்புரம் கிழக்கு தெருவை சேர்ந்த விவசாய கூலி சித்திரன் 23. இவரது வீட்டுக்கு எதிரே துரைப்பாண்டி 21, ஆட்டுக்கிடை அமைத்திருந்தார்.
சித்திரன் அண்ணன் பசுமலை மனைவிக்கும், துரைப்பாண்டிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. கள்ளத்தொடர்பை கைவிடுமாறு துரைப்பாண்டியை, சித்திரன் கண்டித்தார். இதனை தொடர்ந்து துரைப்பாண்டி வெளியூர் சென்றார்.
இந்நிலையில் 2022 ஜன.28ல் துரைப்பாண்டி குள்ளப்புரம் வந்தார். சித்திரனுக்கும், துரைப்பாண்டிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் துரைப்பாண்டி, இவரது அண்ணன் பெரியபாண்டி 24. இருவரும் தனித்தனி அரிவாளால் சித்திரனை உடலில் பல இடங்களில் வெட்டினர்.
துரைப்பாண்டி தந்தை பரமன் 55. சித்திரனை கம்பால் தாக்கினார். படுகாயமடைந்த சித்திரன் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜெயமங்கலம் போலீசார் தந்தை, மகன்கள் ஆகிய 3 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கு பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் கற்பூரசுந்தர் ஆஜரானார்.
நேற்று விசாரணை முடிந்தது. நீதிபதி மாரியப்பன், குற்றவாளிகள் துரைப்பாண்டி, பெரியபாண்டி, பரமன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். பணம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதித்தார்.

