/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளிக்கு கழிப்பறை வசதி
/
ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளிக்கு கழிப்பறை வசதி
ADDED : ஜூன் 23, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: தேனி மாவட்டத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் கனவு திட்டமான பெண்களுக்காக கழிப்பிடம் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ரோட்டரி கிளப் ஆப் கம்பம் கிரீன்வேலி, காமயகவுண்டன்பட்டியில் உள்ள கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.5.80 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜையை நடத்தியது.
இந்த நிகழ்ச்சிக்கு மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் மோகன்தாஸ் தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் உதயசங்கர், செயலாளர் ஜெயசிங், பொருளாளர் தயாளன், முன்னாள் தலைவர் வேல் பாண்டியன், செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.