/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பேட்டரி கார் இயக்காததால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் அவதி குண்டும், குழியுமான ரோடால்
/
பேட்டரி கார் இயக்காததால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் அவதி குண்டும், குழியுமான ரோடால்
பேட்டரி கார் இயக்காததால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் அவதி குண்டும், குழியுமான ரோடால்
பேட்டரி கார் இயக்காததால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் அவதி குண்டும், குழியுமான ரோடால்
ADDED : ஜூலை 26, 2024 12:17 AM
கம்பம் : சுருளி அருவியில் பேட்டரி கார் இயங்காததால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பேட்டரி கார் இயக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சுருளி அருவியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்தது. திடீரென வனத்துறை கேட் அமைத்தது,நுழைவு கட்டணம் வசூலிக்க துவங்கியது. வாகனங்களை பாலத்திற்கு வெளியே நிறுத்த உத்தரவிட்டது.
இதனால் கட்டணத்தை செலுத்திவர்கள் சுமார் 2 கி.மீ. தூரம் குண்டும், குழியுமான ரோட்டில் அருவிக்கு நடந்து செல்ல வேண்டும். இதனால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் நடப்பதற்கு அவதிப்பட்டு வருகின்றனர். சிரமத்தை தவிர்க்க கம்பம் ஊராட்சி ஒன்றியம் சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5.80 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரி வாகனம் வாங்கி வனத்துறையிடம் வழங்கினர்.
சில மாதங்களே ஒடிய பேட்டரி கார் பழுதடைந்தது. பழுதை சீரமைக்காமல் அதற்கென ஒரு கூண்டு செய்து, அதற்குள் ஏற்றி பூட்டி விட்டனர். பின் வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளுக்கென வேன் ஒன்று இயக்கப்பட்டது.
தற்போது அதையும் கம்பம் அலுவலகம் கொண்டு சென்று விட்டனர். சைக்கிள் சர்வீஸ் என்று 20 சைக்கிள்களை வாங்கினர் சைக்கிள்களையும் காணவில்லை.
அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் முதியவர்கள், மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள், சிறுவர்கள் நிலைமை பரிதாபமாக உள்ளது .
அதிலும் நெடுஞ்சாலைத்துறையிடம் தகராறு செய்து, அருவிக்கு செல்லும் பாதையும் பராமரிப்பு செய்யாததால், குண்டும் குழியுமாக உள்ளது.
சுற்றுலா பயணிகளிடம் தலா ரூ.30 நுழைவுக் கட்டணம் என வசூலிக்கும் வனத்துறை, பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேட்டரி காரை பழுது நீக்கி, சுற்றுலா பயணிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.