/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோடு சேதமடைந்ததால் தினமும் வர மறுக்கும் டவுன் பஸ்; அடிப்படை வசதியின்றி பண்ணை தோப்பு மக்கள் பரிதவிப்பு
/
ரோடு சேதமடைந்ததால் தினமும் வர மறுக்கும் டவுன் பஸ்; அடிப்படை வசதியின்றி பண்ணை தோப்பு மக்கள் பரிதவிப்பு
ரோடு சேதமடைந்ததால் தினமும் வர மறுக்கும் டவுன் பஸ்; அடிப்படை வசதியின்றி பண்ணை தோப்பு மக்கள் பரிதவிப்பு
ரோடு சேதமடைந்ததால் தினமும் வர மறுக்கும் டவுன் பஸ்; அடிப்படை வசதியின்றி பண்ணை தோப்பு மக்கள் பரிதவிப்பு
ADDED : மே 21, 2024 07:44 AM

போடி : போடி ஒன்றியம், கோடங்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்டமுதல்வார்டு பண்ணை தோப்பில் ரோடுசேதமடைந்து குண்டும்,குழியுமாக உள்ளதால் அரசு டவுன் பஸ் தினமும் வரமறுப்பதால் மக்கள் சிரமம் அடைகின்றனர்.
கோடங்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பண்ணைத்தோப்பில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி தெரு, மயான ரோடு, சாலிமரத்துப்பட்டி ரோடு உள்ளிட்டதெருக்களில்100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
தீர்த்த தொட்டி மெயின் ரோட்டில் இருந்துசாலிமரத்துப்பட்டி வரை ரோடுஅமைக்காததால்நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாக உள்ளது.சாக்கடை வசதி இருந்தும் வீடுகளில் வெளியேறும் கழிவு நீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. அடிப்படை வசதிகள் செய்து தர மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும்ஊராட்சியில்நடவடிக்கை இல்லை. ஊராட்சியின் நிலவும் மக்கள் பிரச்னைகள் குறித்து கூறியதாவது:
குண்டும், குழியுமான ரோடால் சிரமம்
பரமசிவம், பண்ணைத் தோப்பு:தேனி -போடி மெயின் ரோட்டில் இருந்து தீர்த்த தொட்டி, பண்ணைத்தோப்பு, சாலிமரத்துப்பட்டி வரை 2 கி.மீ., தூரம் ரோடு அமைத்து 8 ஆண்டுகளுக்கு மேலாகிறது.உரிய பராமரிப்பு இல்லாததால் கற்கள் பெயர்ந்து ரோடு குண்டும், குழியுமாக உள்ளது.
இதனால் பள்ளி நாட்களில் காலை, மாலை மட்டும் பஸ் வந்து செல்லும். மற்ற நாட்களில் பஸ்கள் வருவது இல்லை.
பஸ் வசதி இல்லாததால் போடி, தேனி செல்ல 2 கி.மீ., தூரம் நடந்து,டூவீலர் மூலம் சென்றுபஸ்சில் செல்ல வேண்டியுள்ளது. மெயின் ரோட்டில் கொட்டப்படும் குப்பை அகற்றப்படாமல் தீ வைப்பதால் அருகே குடியிருக்கும் மக்களுக்கு சுகாதாரகேடு ஏற்படுகிறது. மயானத்தில் போர்வெல் பழுதால் பயன்பாடின்றி உள்ளது. இதனால் இறந்தவர்கள் புதைப்பதற்கு தண்ணீர் வசதி இன்றி அரை கி.மீ., தூரம் சென்று தண்ணீர் சுமந்து வர வேண்டிய நிலை உள்ளது. மின் விளக்கு வசதி இல்லாததால் இரவில் இறந்தவர்களை கொண்டு செல்ல சிரமம் ஏற்படுகிறது.
ரேஷன் கடை தேவை
எஸ்.முருகன்,பண்ணைத்தோப்பு: இங்குரேஷன் கடை இல்லாததால் வாரத்தில் இரண்டு நாட்கள் வாகனங்களில் வந்து பொருட்கள் வினியோகம் செய்கின்றனர். மழை காலங்களில் வருவதில்லை. இதனால் 3 கி.மீ., தூரம் கோடாங்கிபட்டி சென்று பொருட்கள் பெற வேண்டிய நிலையில் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். பெண்களுக்கான சுகாதார வளாகம்சேதம் அடைந்து உள்ளதுள்ளதால்பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். கிழக்கு கண்மாய் மெயின் ரோடு அருகே குப்பை கொட்டுவதை அகற்றாமல் தீ வைத்து வருவதால் வெளியேறும் நச்சு புகையால் மக்களுக்கு சுகாதார கேடு ஏற்படுகிறது.சுகாதார வளாகம் அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிப்படை வசதி மேம்படுத்தப்படும்
பா.சாந்தா, ஊராட்சித் தலைவர், கோடங்கிபட்டி:பண்ணை தோப்பு தெருக்களுக்கு தேவையான ரோடு, சாக்கடை, தெருவிளக்கு வசதி செய்து தரப்பட்டுள்ளன. சேதம் அடைந்த மெயின் ரோட்டை சீரமைக்க போடி ஒன்றிய நிதி மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மயானத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும், தேக்கமான குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

