/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அச்சு முறிந்து நின்ற லாரியால் போக்குவரத்துக்கு இடையூறு
/
அச்சு முறிந்து நின்ற லாரியால் போக்குவரத்துக்கு இடையூறு
அச்சு முறிந்து நின்ற லாரியால் போக்குவரத்துக்கு இடையூறு
அச்சு முறிந்து நின்ற லாரியால் போக்குவரத்துக்கு இடையூறு
ADDED : ஆக 12, 2024 03:49 AM

ஆண்டிபட்டி : கொச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரம் அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த லாரியில் முன் சக்கரங்களின் அச்சு முறிந்ததால் நடுரோட்டில் நின்றது.
மகாராஷ்டிரா மாநிலம் பீடு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரன் 28. அம்மாநில பதிவு எண் கொண்ட லாரியை ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் கரும்பு ஏற்றுவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டி வந்தார். நேற்று முன் தினம் நள்ளிரவில் சர்க்கரை ஆலையில் இருந்து உசிலம்பட்டி பகுதிக்கு கரும்பு ஏற்ற சென்ற லாரியில் முன் சக்கரங்களின் அச்சு முறிந்ததால் டி.சுப்புலாபுரம் அருகே நடுரோட்டில் நின்றது.
அதிக வாகனங்கள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏதும் இல்லை. தனியார் சர்க்கரை ஆலை பணியாளர்கள், ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினர், போலீசார் ஏற்பாட்டில் லாரி, மண் அள்ளும் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.