/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கலெக்டர் அலுவலக ஊழியரிடம் வழிப்பறி செய்த இருவர் கைது
/
கலெக்டர் அலுவலக ஊழியரிடம் வழிப்பறி செய்த இருவர் கைது
கலெக்டர் அலுவலக ஊழியரிடம் வழிப்பறி செய்த இருவர் கைது
கலெக்டர் அலுவலக ஊழியரிடம் வழிப்பறி செய்த இருவர் கைது
ADDED : மார் 09, 2025 04:04 AM

தேனி : தேனி கலெக்டர் அலுவலக ஊழியர் ரமேஷ் என்பவரிடம் அலைபேசி, ரூ.1.40 லட்சம் மதிப்பிலான 3.5 பவுன் செயின் பறித்த பழனிச்செட்டிபட்டியை சேர்ந்த சீமான்21, முகேஷ் குமார்20, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிபட்டியை சேர்ந்த ரமேஷ் 37, கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிகிறார். இவர் பழனிசெட்டிபட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். மதுபோதையில் இருந்தார்.
அப்பகுதியில் நின்றிருந்த பெரியார் தெருவை சேர்ந்த சீமான் அவரது நண்பர்களிடம் விபச்சாரம் தொடர்பாக பேசினார். சீமான் அவரது நண்பர்கள் ரமேஷை ஆட்டோவில் ஏற்றி மதுவாங்கி கொடுத்தனர். அவரிடமிருந்து அலைபேசி, 3.5பவுன் செயினை பறித்து அனுப்பினர். ரமேஷ் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் சீமான், அவரது நண்பர் சித்தார்த், மேலும் இருவர் மீது வழக்கு பதிந்தனர்.
இந்நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட சீமான், முகேஷ்குமாரை கைதுசெய்தனர். மற்றவர்களை தேடிவருகின்றனர்.