ADDED : ஜூலை 30, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி, ஜூலை 31-
கெங்குவார்பட்டி தெற்கு தெரு சந்தோஷ்குமார் 22. இவரது நண்பர் செல்வா 28.தேங்காய் வெட்டும் தொழிலாளர்கள். இருவரும் இதே ஊரைச் சேர்ந்த தவராஜா 49, தென்னந்தோப்பில் தேங்காய் வெட்டி குவித்து சென்றனர். யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வந்த இருவரும் 150 தேங்காய்களை சாக்கில் கட்டி டூவீலரில் திருடினர். இதனையறிந்த தவராஜா வழிமறித்தார். சந்தோஷ்குமார் டூவீலரில் தவராஜா மீது மோதியதில் தவராஜா கீழே விழுந்தார். செல்வா கம்பியால் தாக்கினார். தவராஜா தம்பி வருவதை பார்த்து இருவரும் தப்பினர். தேவதானப்பட்டி போலீசார் சந்தோஷ்குமார், செல்வாவை கைது செய்து, தேங்காய்களை கைப்பற்றினர்.
--
