/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வங்கி ஊழியர் மீது தாக்குதல் இரு வாலிபர்கள் கைது
/
வங்கி ஊழியர் மீது தாக்குதல் இரு வாலிபர்கள் கைது
ADDED : ஜூன் 23, 2024 04:37 AM
தேனி: வீரபாண்டி சத்திரப்பட்டியை சேர்ந்தவர் ராஜவேலு 40. இவர் தனியார் வங்கியில் வேலை செய்கிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன் தனது சகோதரர் சக்திவேல் மகள் தேனி தனியார் பள்ளியில் படித்தபோது, அரண்மனைப்புதார் முல்லைநகரை சேர்ந்த ஹரிஹரனுடன் 24, பழக்கம் ஏற்பட்டது.
இந்த விபரம் தெரிந்த ராஜவேலு, அவரது சகோதரர் இணைந்து ஹரிஹரனை கண்டித்தனர். இதில் முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஜூன் 20ல் அரண்மனைப்புதுார் விலக்கில் ராஜவேலு நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது ஹரிஹரன், வீரபாண்டி கிழக்குத்தெரு அஜய் 20, அதேப்பகுதி சுபாஷ் 21, ஆகிய மூவர் ராஜவேலுவை தாக்கினர்.
ஹரிஹரன் கம்பியால் ராஜவேலு தலையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து மூவரும் தப்பித்துச் சென்றனர்.
காயம் அடைந்த ராஜவேலு, தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
தேனி எஸ்.ஐ., மாயன், ஹரிஹரன், அஜய், சுபாஷ் உட்பட மூவர் மீது வழக்குப்பதிந்து, ஹரிஹரன், அஜய்யை கைது செய்தனர்.