/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீரபாண்டி திருவிழா வழித்தட மாற்றம்
/
வீரபாண்டி திருவிழா வழித்தட மாற்றம்
ADDED : மே 06, 2024 12:47 AM
தேனி : வீரபாண்டி சித்திரை திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து வழித்தடம் மே 7 முதல் 14 வரை போக்குவரத்து வழித்தடம் மாற்றப்படுவதாக கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா நாளை முதல் மே 14 வரை நடக்கிறது. இதற்காக போக்குவரத்து வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனியில் இருந்து சின்னமனுார் செல்லும் வாகனங்கள் உப்புக்கோட்டை விலக்கு, மார்க்கையன்கோட்டை விலக்கு, குச்சனுார் வழியாக சின்னமனுார் செல்லும்.
அதே போல் மறுமார்க்கத்தில் வரும் வாகனங்கள் உப்பார்பட்டி பிரிவு, தாடிச்சேரி, தப்புக்குண்டு, கொடுவிலார்பட்டி வழியாக தேனி வந்தடையும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். மேலும் மாற்றுத்திறனாளிகள் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக கோயில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.