/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை நிறைவு
/
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை நிறைவு
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை நிறைவு
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை நிறைவு
ADDED : மே 13, 2024 06:48 AM
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை நிறைவடைகிறது.
இக்கோயில் சித்திரை திருவிழாவிற்காக ஏப்.,17 ல் திருக்கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் திருக்கம்பத்திற்கு முல்லைபெரியாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து அபிஷேகம் செய்து வந்தனர். சித்திரை திருவிழா மே 7 ல் கோலாகலமாக துவங்கியது. பக்தர்கள் அக்னிசட்டி , காவடி, ஆயிரம் கண்பானை, அலகு குத்தி, சேத்தாண்டி வேடமிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 10ல் துவங்கியது. தேர் இன்று மாலை நிலைக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து திருக்கம்பம் நிலை பெயர்த்தல் நடக்க உள்ளது. நாளை இரவு அம்மன் திருபாவரணப் பெட்டிக்கு சிறப்பு பூஜையுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது. நாளை மறுநாள் அம்மன் கோயில் வீட்டில் எழுந்தருளுதல் நிகழ்வு நடக்கிறது.
வார இறுதி நாட்களான கடந்த இரு தினங்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
விழாவில் கண்காணிப்பிற்காக கோயில் வளாகம் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களின் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.