/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விஸ்வ ஹிந்து பரிஷத் ஸ்தாபன தின விழா
/
விஸ்வ ஹிந்து பரிஷத் ஸ்தாபன தின விழா
ADDED : ஆக 28, 2024 06:31 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 60ம் ஆண்டு ஸ்தாபன தின விழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா வைகை ரோடு சந்திப்பு அருகே நடந்தது. வர்த்தக பிரமுகர் சேட்டுபரமேஸ்வரன் தலைமை வகித்தார். டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி முதல் வார்டு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார்.
மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ராஜபாண்டியன், டாக்டர் தேவி பங்கேற்றனர். விழாவில் ஸ்ரீ கிருஷ்ணர் - ராதை வேடம் அணிந்து வந்த 600க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை விஸ்வ ஹிந்து பரிஷத் மதுரை விபாக் செயலாளர் கண்ணாயிரம் செய்திருந்தார்.