ADDED : மார் 22, 2024 05:37 AM
தேவதானப்பட்டி: தேனி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் நேற்று மாலை மாவட்ட எல்லையான காட்ரோட்டில் தேனி மாவட்ட நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். சரவணக்குமார் எம்.எல்.ஏ., வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., லட்சுமணன், நகர செயலாளர் முகமது இலியாஸ், பேரூர் செயலாளர்கள் குணசேகரன், தமிழன், பேரூராட்சி தலைவர்கள் நடேசன், பால்பாண்டி, நாகராஜ், அரசு வழக்கறிஞர் சிவக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் மாலை, சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர். பெரியகுளம் பகுதியிலும் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
--தேனி: தேனி வந்த தங்கதமிழ்செல்வனுக்கு நகர் தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் நேருசிலைக்கு மாலை அணிவித்து நிர்வாகிகள் மரியாதை ஏற்றார். தி.மு.க., நகர செயலாளர் நாராயணபாண்டியன், நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா, துணைத் தலைவர் செல்வம், தி.மு.க., கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி, சீலையம்பட்டியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

