/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை; ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து, மின்சாரம் பாதிப்பு
/
மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை; ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து, மின்சாரம் பாதிப்பு
மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை; ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து, மின்சாரம் பாதிப்பு
மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை; ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து, மின்சாரம் பாதிப்பு
ADDED : மே 14, 2024 12:33 AM

போடி : போடி பகுதியில் நேற்று மதியம் மின்னலுடன் பெய்த கன மழையால் பூமி குளிர்ச்சி அடைந்ததோடு, கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து வர துவங்கியது.
போடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. நேற்று மதியம் 3:30 மணிக்கு போடி, குரங்கணி, கொட்டகுடி, சிலமலை, சூலப்புரம், ராசிங்காபுரம் பகுதியில் இடியுடன் பெய்த கனமழையால் வறண்டு கிடந்த பூமி குளிர்ச்சி அடைந்தது.
போடி காமராஜ் பஜார், போஜன் பார்க் உள்ளிட்ட மெயின் ரோடுகளில் மழை நீர் ஓடை போல பெருக்கெடுத்து சென்றது. மலைப் பகுதியில் பெய்த கனமழையால் வறண்டு கிடந்த கொட்டகுடி ஆற்றுப் பகுதியில் நீர்வரத்து வர துவங்கியது.
மதியம் 3:30 மணிக்கு பெய்ய துவங்கிய கனமழையானது 4:30 மணிக்கு மேலும் நீடித்ததால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெரியகுளம் பகுதியில் நான்கு நாட்களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெயிலில் காய்ந்திருந்த நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத் துவங்கியது. வராகநதியில் சாக்கடை கழிவுகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு தூய்மையாகி வருகிறது. பெரியகுளம் பகுதியில் காலையில் வெயில் இருந்தாலும், மாலையில் பெய்யும் மழையால் குளிர்ந்த காற்று வீசுகிறது.
நேற்று மதியம் பெய்த கனமழைாயால் பெரியகுளம் -தேனி மெயின் ரோடு கூட்டுறவு பால் சங்கம் எதிரே இருந்த 10 ஆண்டு வேப்ப மரம் ரோட்டில் சாய்ந்தது போக்குவரத்து தடை ஏற்பட்டது.
தகவலறிந்து தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
தேனியில் நேற்று மாலை பெய்த மழையால் 3 மணிநேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. அடிக்கடி மின்சாரம் வந்து தடைபட்டது. மக்கள் பாதிக்கப்பட்டனர்.

