ADDED : ஜூலை 04, 2024 02:01 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கொப்பையம்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 31, இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த பாண்டிச்செல்வி 19, என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.
நெசவுத் தொழில் செய்து வந்த ராமகிருஷ்ணன் தொழில் நசிவால் தற்போது டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு ராமநாதபுரம் சென்று வருகிறார். பாண்டிச்செல்வி தனது பெற்றோருடன் கொப்பையம்பட்டியில் இருந்து கொண்டு பிச்சம்பட்டியில் உள்ள தனியார் பேக்கரிக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் திரும்ப வரவில்லை. இவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ராமகிருஷ்ணன் வீட்டில் வந்து பார்த்தபோது மனைவி பாண்டிச் செல்வி தனது நகை, பள்ளிச் சான்றிதழ், ரூ.3000 பணம் ஆகியவற்றை எடுத்து சென்றதாக தெரியவந்தது. கணவர் புகாரில் போலீசார் பாண்டிச்செல்வியை தேடி வருகின்றனர்.