/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடியில் திறந்த வெளி ஆடுவதை தடுக்கப்படுமா
/
போடியில் திறந்த வெளி ஆடுவதை தடுக்கப்படுமா
ADDED : மார் 07, 2025 07:18 AM
போடி : இந் நகராட்சியில் ஆட்டிறைச்சி விற்பனை செய்வோர் நகராட்சி, உணவு பாதுகாப்பு துறையினரிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும்.
நகராட்சி ஆடுவதை கூடத்தில் ஆடு வதை செய்வதற்கு முன் நோய் இல்லாத ஆடு என்பதை உறுதி செய்து ஆடுவதை செய்த பின் ஆட்டின் மேல் நகராட்சி சீல்' வைக்கப்பட்ட பின் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். ஆனால் சிலர் ரோட்டை ஆக்கிரமித்தும், சாக்கடை மீது கடைகள் அமைத்து திறந்த வெளியில் ஆடுவதை செய்து விற்பனை செய்கின்றனர்.
இதை வாங்கி சாப்பிடும் மக்களுக்கு பல்வேறு வகையில் சுகாதாரசீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. திறந்த வெளியில் ஆடுவதை செய்வதை தடுத்திடவும், அனுமதி பெற்று ஆட்டிறைச்சி விற்பனை செய்ய சுகாதாரதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.