/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முதியோர் உதவித்தொகை பெற்று தருவதாக கூறி மூதாட்டியிடம் பெண் நூதன மோசடி
/
முதியோர் உதவித்தொகை பெற்று தருவதாக கூறி மூதாட்டியிடம் பெண் நூதன மோசடி
முதியோர் உதவித்தொகை பெற்று தருவதாக கூறி மூதாட்டியிடம் பெண் நூதன மோசடி
முதியோர் உதவித்தொகை பெற்று தருவதாக கூறி மூதாட்டியிடம் பெண் நூதன மோசடி
ADDED : மார் 30, 2024 04:18 AM
பெரியகுளம், : வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் முதியோர் உதவித்தொகை பெற்றுத் தருவதாக கூறி ரூ.1.25 லட்சம் மதிப்பிலான தங்க நகையை திருடிச்சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரியகுளம் தென்கரை கோட்டைதெருவைச் சேர்ந்த காத்தான் மனைவி சங்கிலியம்மாள் 62. வீட்டில் தனியாக இருந்தவரிடம் அடையாளம் தெரிந்த பெயர் விலாசம் தெரியாத 45 வயதுடைய பெண் ஒருவர் வந்து 'உங்களுக்கு முதியோர் உதவித்தொகை வாங்கி தருகிறேன், வெளியில் அரசு அதிகாரிகள் நிற்கின்றனர்.
நீங்கள் தங்கச்செயின் அணிந்திருந்தால் தரமாட்டார்கள். எனவே செயினை கழட்டி டப்பாவில் போடுங்கள்' என தெரிவித்தார்.
சங்கிலியம்மாள் தான் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் செயினை டப்பாவில் கழட்டி வீட்டிற்குள் வைத்தார். பின்னர் சங்கலியம்மாள், அவரது கணவர் காத்தானையும் மோசடி செய்ய வந்த பெண்ண அழைத்துசென்று அருகேயுள்ள நகல் எடுக்கும் கடை வாசலில் உட்கார வைத்தார். வெகுநேரமாகியும் சம்பந்தப்பட்ட பெண் வராததால் சங்கிலியம்மாள் வீட்டுக்குச் சென்றார்.
அங்கு டப்பாவை பார்த்தபோது 1.25 லட்சம் மதிப்புள்ள 3 பவுன் தங்க செயின் திருடு போனது தெரிய வந்தது.
புகாரில் நூதனமாக மூதாட்டியிடம் நகை திருடி சென்ற பெண்ணை தென்கரை போலீசார் தேடி வருகின்றனர்.

