/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உத்தமபாளையம் கோயில் அருகே தொடர் வழிப்பறியால் பெண்கள் அச்சம்
/
உத்தமபாளையம் கோயில் அருகே தொடர் வழிப்பறியால் பெண்கள் அச்சம்
உத்தமபாளையம் கோயில் அருகே தொடர் வழிப்பறியால் பெண்கள் அச்சம்
உத்தமபாளையம் கோயில் அருகே தொடர் வழிப்பறியால் பெண்கள் அச்சம்
ADDED : செப் 08, 2024 04:57 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையம் முத்து கருப்பணசாமி கோயிலிற்கு அருகில் வழிப்பறி சம்பவங்கள் நடப்பதால் பெண்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
உத்தமபாளையத்திலிருந்து உ. அம்மாபட்டி செல்லும் ரோட்டில் பிரசித்தி பெற்ற பாறையடி முத்து கருப்பண சுவாமி கோயில் உள்ளது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். தினமும் பக்தர்கள் வருகின்றனர். இந்த கோயில் பகுதியில் வசிக்கும் ஒரு கும்பல் தென்னந் தோப்புகளில் தேங்காய் திருட்டில் ஈடுபட்டு வருகிறது. நேற்று முன்தினம் கோயில் அருகே அலைபேசியில் பேசிக் கொண்டு நடந்து சென்ற பெண்ணிடம் அலைபேசி மற்றும் பர்சை பறித்து சென்றுள்ளனர்.
நேற்று காலை வீட்டிற்குள் அமர்ந்திருந்த பெண்ணின் கையில் இருந்த அலை பேசியை வீட்டிற்குள் புகுந்து பறித்து சென்றுள்ளனர்.இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . இப்பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் தொடர்கிறது. தோட்டங்களில் தேங்காய் திருட்டில் ஆரம்பித்து தற்போது வழிப்பறியில் நிற்கிறது. இதனால் இப்பகுதி பெண்கள் அச்சமடைந்துள்ளனர். போலீசார் ரோந்திற்கு ஏற்பாடு செய்யவும்,வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துகள்ளனர்.