/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு இன்று பணி ஒதுக்கீட்டு ஆணை
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு இன்று பணி ஒதுக்கீட்டு ஆணை
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு இன்று பணி ஒதுக்கீட்டு ஆணை
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு இன்று பணி ஒதுக்கீட்டு ஆணை
ADDED : ஏப் 18, 2024 06:07 AM
தேனி: லோக்சபா தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் உள்ள 1225 ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.
ஓட்டுச்சாவடிகளில் தலா 1469 தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர்கள், ஓட்டுப்பதிவு  அலுவலர்கள் நிலை 1 முதல் 4 வரை  என மொத்தம் 6074 பேர் பணிபுரிய உள்ளனர்.  தேர்தல் அலுவலர்களுக்கு  ஓட்டுச்சாவடிகள் ஒதுக்கிடும் பணி கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா, தேர்தல் பொதுப்பார்வையாளர் கவுரங்பாய் மக்வான தலைமையில் நடந்தது.
தேர்வு செய்யப்பட்ட ஓட்டுச்சாவடியில் பணிபுரிவதற்கான பணி ஆணை இன்று தாலுகா அலுவலகங்களில் ஆசிரியர்கள், அலுவலர்களிடம் வழங்கப்பட உள்ளது.