/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தனியார் பள்ளி ஆசிரியைக்கு தொந்தரவு தொழிலாளிக்கு ஐந்தாண்டுகள் சிறை
/
தனியார் பள்ளி ஆசிரியைக்கு தொந்தரவு தொழிலாளிக்கு ஐந்தாண்டுகள் சிறை
தனியார் பள்ளி ஆசிரியைக்கு தொந்தரவு தொழிலாளிக்கு ஐந்தாண்டுகள் சிறை
தனியார் பள்ளி ஆசிரியைக்கு தொந்தரவு தொழிலாளிக்கு ஐந்தாண்டுகள் சிறை
ADDED : பிப் 28, 2025 06:43 AM

தேனி: ஆண்டிபட்டி அருகே ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளி ராஜ்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டை விதிக்கப்பட்டது.
ஆண்டிபட்டி தாலுகா தனியார் பள்ளியின் 30 வயது ஆசிரியை. இவர் 2021 நவ.4ல் காலை வீட்டருகே உள்ள தோட்டத்தை ஒட்டி நடந்து சென்றார். அங்கு பணிபுரிந்த ராஜ்குமார் 42, அவரை வலுக்கட்டாயமாக தோட்டத்திற்குள் இழுத்து சென்று தொந்தரவு செய்தார். ஆசிரியை புகாரில் கண்டமனுார் விலக்கு போலீசார் ராஜ்குமார் மீது வன்கொடுமை, பலாத்காரம் தடுப்பு சட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்தனர். அன்றே ராஜ்குமாரை கைதும் செய்தனர். இந்த வழக்கு விசாரனை தேனி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கறிஞர் இசக்கிவேல் ஆஜரானார். நேற்று விசாரணை முடிந்து, குற்றவாளி தொழிலாளி ராஜ்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.7ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி அனுராதா நேற்று தீர்ப்பளித்தார்.