/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திருமணத்திற்கு 4 நாட்கள் உள்ள நிலையில் இளைஞர் தற்கொலை
/
திருமணத்திற்கு 4 நாட்கள் உள்ள நிலையில் இளைஞர் தற்கொலை
திருமணத்திற்கு 4 நாட்கள் உள்ள நிலையில் இளைஞர் தற்கொலை
திருமணத்திற்கு 4 நாட்கள் உள்ள நிலையில் இளைஞர் தற்கொலை
ADDED : செப் 01, 2024 06:11 AM

கம்பம், : கம்பம் அருகே ஊத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் ராஜ்குமார் 27, இவர் யுடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவருக்கு செப். 5 ல் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமண அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை 10:00 மணிக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக கூடலுார் சென்றார். நடைபயிற்சி தளத்தில் டூவீலரை நிறுத்தி விட்டு விஷம் குடித்து மயங்கிவிழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். திருமணம் நடக்க 4 நாட்களே உள்ள நிலையில் இளைஞர் தற்கொலை செய்தது குடும்பத்தினரிடைய அதிர்ச்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.