/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
100 முதல் 325 சதுரடி அளவு புதிய கடைக்கு மட்டும் அனுமதி: பட்டாசு விற்பனையில் விதி மீறினால் உரிமம் ரத்து
/
100 முதல் 325 சதுரடி அளவு புதிய கடைக்கு மட்டும் அனுமதி: பட்டாசு விற்பனையில் விதி மீறினால் உரிமம் ரத்து
100 முதல் 325 சதுரடி அளவு புதிய கடைக்கு மட்டும் அனுமதி: பட்டாசு விற்பனையில் விதி மீறினால் உரிமம் ரத்து
100 முதல் 325 சதுரடி அளவு புதிய கடைக்கு மட்டும் அனுமதி: பட்டாசு விற்பனையில் விதி மீறினால் உரிமம் ரத்து
ADDED : அக் 13, 2024 05:32 AM
தேனி: ‛தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மாவட்டத்தில் பட்டாசு கடை நடத்திட விண்ணப்பித்த மனுக்கள் மீது அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றன. இந்தாண்டு 100 சதுரடி முதல் 325 சதுரடி வரையுள்ள தற்காலிக பட்டாசு கடைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும் என மாவட்ட தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் நிரந்தர பட்டாசு கடைகள் 76 உள்ளன. தற்போது தீபாவளி பண்டிகைக்காக 16 கடைகள் தற்காலிக உரிமம் பெற டி.ஆர்.ஓ.,விடம் விண்ணப்பித்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் மீது போலீசார், தீயணைப்புத்துறை ஆய்வு நடத்தி விதிகளை பின்பற்றி கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட உள்ளன. இந்நிலையில் தற்போது பட்டாசு கடைகளுக்கு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை புதிய விதிமுறை களை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பட்டாசு கடைகள் அமைந்துள்ள இடம் 100 சதுர அடியில் இருந்து 325 சதுரடிக்குள் இருப்பது அவசியம். குறிப்பிட்ட அளவிற்கு குறைவாகவோ அதிகமாகவோ இருக்கக் கூடாது. கடையில் ஏற்கனவே பணியில் இருந்தவர் தவிர, புதிய நபர்கள் பணியமர்த்தக் கூடாது. கடை திறந்தவெளி அமைப்புடன் நுழைவாயில் பகுதியுடன் அவசர வழிக்கான வசதியும் அமைத்திருப்பது அவசியம். மேலும் கடையின் முன் பட்டாசுகளை வெடித்து பரிசோதனை செய்ய வாடிக்கையாளர்களை அனுமதிக்கக்கூடாது.
தீயணைப்பு கருவிகள் அவசியம்:
பட்டாசு கடைகளில் 2 தீயணைப்பான் கருவிகள், 2 வாளி, 200 லிட்டர் தண்ணீர் கொள்ளவு உள்ள பெரிய ட்ரம் வைத்திருப்பது அவசியம். ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் 15 மீட்டர் இடைவெளி அவசியம். பட்டாசு கடை அமைந்துள்ள கட்டத்தின் மேற்பகுதியில் குடியிருப்புப் பகுதிகள் இருக்கக்கூடாது. கடைகளில் கூடுதலாக இருப்பு வைத்திருந்தால் விதிறல் நடவடிக்கை எடுத்து உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை எச்சரித்துள்ளது.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் கூறுகையில், ‛ தீவிர ஆய்வு செய்த பின் உரிமம் வழங்கப்படுகிறது. விதிமுறை மீறியிருந்தால் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.', என்றார்.