/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பான குறைதீர் கூட்டம் ஜன.20ல் நடக்கிறது

ADDED : ஜன 15, 2024 12:23 AM
தேனி : மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பான குறைகளை பொது மக்கள் தெரிவிக்க குறைதீர் கூட்டம் ஜன., 20ல் தாலுகாவிற்கு ஒர் இடம் என மாவட்டத்தில் 5 இடங்களில் காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
இக்கூட்டத்தில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை குறித்தும் மனுக்கள் பதியலாம். பெரியகுளம் தாலுகா தாமரைகுளம் அ.மீனாட்சிபுரம் சமுதாயகூடத்தில் ஆர்.டி.ஓ., முத்துமாதவன் முன்னிலையில் நடக்கிறது.
தேனி கோட்டூர் தேவேந்திரகுல வேளாளர் திருமண மண்டபத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இந்துமதி முன்னிலையில், ஆண்டிப்பட்டி தாலுகாவில் கடமலைகுண்டு ரேஷன் கடையில் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் முரளி முன்னிலையில், உத்தமபாளையம் ஓடைப்பட்டி பேரூராட்சி கோபால்நாயக்கன்பட்டி சொசைட்டி வளாகத்தில் ஆர்.டி.ஓ., பால்பாண்டி முன்னிலையில், போடி முந்தல் ரேஷன் கடையில் மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி முன்னிலையில் குறைதீர் கூட்டங்கள் நடக்க உள்ளது. ரேஷன் பொருட்கள் தொடர்பான மனுக்கள் வழங்கி பொது மக்கள் பயனடையலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.