/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தயா; 14,567 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
/
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தயா; 14,567 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தயா; 14,567 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தயா; 14,567 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
ADDED : மார் 25, 2024 05:24 AM
மாவட்டத்தில் அரசு, உதவி பெறும், தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் 156, உயர்நிலைப்பள்ளிகள் 68 உள்ளன. இவற்றில் 7328 மாணவர்கள், 7239 மாணவிகள் 10ம் வகுப்பு படிக்கின்றனர். இவர்களுக்கு அரசுப் பொதுத்தேர்விற்கான செய்முறைத்தேர்வு பிப்., 23 முதல் 29 வரை நடந்தது.
இதனை தொடர்ந்து நாளை அரசு பொதுத்தேர்வு துவங்குகிறது. தேர்வு காலை 10:00 மணி முதல் மதியம் 1:15 வரை நடக்கிறது. மார்ச் 26ல் தமிழ், மார்ச் 28 ல் ஆங்கிலம், ஏப்.,1ல் கணிதம், ஏப்., 4ல் அறிவியல், ஏப்.,6ல் விருப்ப மொழி, ஏப்.,8 ல் சமூக அறிவியல் தேர்வுகள் நடக்க உள்ளது.
எழுத்துத்தேர்வு 68 மையங்களில் நடக்கிறது. தேர்வில் அறை கண்காணிப்பாளர்களாக 735 ஆசிரியர்கள், பறக்கும்படை, கண்காணிப்பு குழுக்களில் 110 பேர், அலுவலர் பணிகளுக்காக 71 ஆசிரியர்கள் துறை அலுவலர்கள் என 975 பேர் பணிபுரிய உள்ளனர். 12 வழித்தடங்களில் பறக்கும்படை செயல்பட உள்ளது. அறை கண்காணிப்பாளர்கள், முதன்மை தேர்வுமைய கண்காணிப்பாளர்கள் என அனைவருக்கும் சி.இ.ஓ., இந்திராணி, டி.இ.ஓ., வசந்தா தலைமையில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.இது தவிர மாவட்டத்தில் உள்ள 137 மாற்றுத்திறன் மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக 137 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்விற்கு உரிய நேரத்தில் வருகை தரவும், சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
தேர்வு நேரத்தில் தடையில்லா மின்சாரம், பள்ளிகளுக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்டவைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

