/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரளாவில் வனவிலங்குகள் தாக்கியதில் 124 பேர் பலி ரயில் மோதி, மின்சாரம் தாக்கி 34 யானைகள் இறப்பு

ADDED : நவ 27, 2024 08:39 AM
மூணாறு : ''கேரளாவில் வனவிலங்குகள் தாக்கியதில் ஐந்தாண்டுகளில் 124 பேர் பலியாகியுள்ளனர். ரயில் மோதியும், மின்சாரம் தாக்கியும் 34 யானைகள் இறந்துள்ளன,'' என, மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் வனவிலங்கு தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து காங்., எம்.பி.,க்கள் ஆன்டோஆன்டணி, பென்னிபெஹனன் ஆகியோர் லோக்சபாவில் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் பதிலில் கூறியதாவது: கேரளாவில் 5ஆண்டுகளில் வனவிலங்கு தாக்குதலில் 124 பேர் இறந்தனர். இருவர் புலி தாக்கி இறந்தனர். ரயில் மோதியும், மின்சாரம் தாக்கியும் 34 காட்டு யானைகள் பலியாகின. வனவிலங்கு தாக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டது.
அதில் மத்திய அரசு 60 சதவிகிதம், மாநில அரசு 40 சதவிகிதம் வீதம் வழங்கப்படுகிறது. மனித, வன விலங்கு மோதலை தடுப்பது மாநில அரசின் பொறுப்பு என்றார்.
இடுக்கி எம்.பி. டீன் குரியாகோஸ் மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அளித்த மனுவில், கேரளாவில் மனித, வனவிலங்கு மோதலை தடுப்பதற்கு மத்திய அரசு ரூ.620 கோடி நிதி மாநில அரசின் கோரிக்கையை ஏற்று வழங்க வேண்டும்.
தற்போது இடுக்கி மாவட்டம் உள்பட மலையோரம் வனவிலங்குகளால் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனை சமாளிக்க நிதியுதவி தேவை என கோரியுள்ளார்.
அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்ததாக எம்.பி. டீன்குரியா கோஸ் தெரிவித்தார்.