/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.130 கோடியில் அறிவிக்கப்பட்ட வாழை சிறப்பு திட்டம் செயல்பாட்டிற்கு வருமா மூன்று ஆண்டுகளாக முடங்கிய நிலை

ADDED : மார் 05, 2024 04:16 AM
கம்பம் : வாழை பயிருக்கான சிறப்பு திட்டம் ரூ.130 கோடியில் அறிவிக்கப்பட்டு இன்று வரை திட்டம் நிறைவேற்ற வில்லை என விவசாயிகள் அதிருத்தி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் 22 ஆயிரம் எக்டேரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி தாலுகாக்களில் பரவலாக சாகுபடியாகிறது.
இங்கிருந்து வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் வாழைக்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
செவ்வாழை, நேந்திரன், நாழிப் பூவன், ஜி 9 உள்ளிட்ட பல ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. நல்ல விலை தொடர்ந்து கிடைத்து வருவதால், வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
வாழை விவசாயிகளுக்கென சின்னமனூர் ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் ரூ.5.37 கோடியில் கட்டப்பட்ட வாழை சிப்பம் கட்டும் கிட்டங்கி மற்றும் குளிர்பதன கிட்டங்கி திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
வாழை விவசாயிகளுக்கு தீராத பிரச்னையாக உள்ள வெடி வாழை, காற்று காலங்களில் சாய்ந்து நஷ்டம் ஏற்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
வாழை விவசாயிகளுக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், மார்க்கெட்டிங் வசதி, குளிர்பதன கிட்டங்கி வசதி, ஆராய்ச்சி நிலையம் என எதுவும் இல்லை.
இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முன்று ஆண்டுகளுக்கு முன் ரூ.130 கோடியில் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டது.
இத் திட்டத்திற்கு அரசாணை வெளியிட்டாலும், நிதி ஒதுக்கீடுகள் செய்ய வில்லை. இதனால் வாழை சிறப்பு திட்டம் செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் வாழை சாகுபடியை மேம்படுத்த வாழை ஊக்குவிப்பு திட்ட நிதி ஒதுக்கீட்டை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
ஆராய்ச்சி நிலையம் துவக்கி விவசாயிகளின் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.