/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் நகை திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் நகை திருட்டு
ADDED : ஜூலை 30, 2025 12:29 AM
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே பொம்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரி, ஒன்றரை ஆண்டாக நரியூத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஒத்திக்கு குடியிருந்து வருகிறார்.
இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார். இரு மகன்கள் வெளியூரில் வேலை செய்கின்றனர். ஈஸ்வரி கடந்த சில ஆண்டுகளாக கேரள மாநிலம் சாந்தம்பாறை அருகே ஏலக்காய் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். ஜூலை 19ல் ஈஸ்வரி வீட்டை பூட்டிவிட்டு அவரது உறவினர் தனலட்சுமி என்பவரிடம் சாவியை கொடுத்துவிட்டு கேரளாவிற்கு வேலைக்கு சென்று விட்டார். நேற்று முன் தினம் ஈஸ்வரியின் உறவினர் போன் செய்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாகவும் பீரோ கதவும் உடைந்து நிலையில் இருப்பதாகவும் தகவல் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து ஈஸ்வரி வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த ரூ.4.05 லட்சம் மதிப்பிலான 13.5 பவுன் நகைகளை யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஈஸ்வரி புகாரில் கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.