/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
16 கிலோ ஆந்திரா கஞ்சா பறிமுதல் 3 பெண்கள் உட்பட நால்வர் கைது
/
16 கிலோ ஆந்திரா கஞ்சா பறிமுதல் 3 பெண்கள் உட்பட நால்வர் கைது
16 கிலோ ஆந்திரா கஞ்சா பறிமுதல் 3 பெண்கள் உட்பட நால்வர் கைது
16 கிலோ ஆந்திரா கஞ்சா பறிமுதல் 3 பெண்கள் உட்பட நால்வர் கைது
ADDED : ஆக 01, 2025 02:12 AM
தேனி: ஆந்திராவில் இருந்து 16 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து சில்லரை கஞ்சா வியாபாரிகளுக்கு சப்ளை செய்த வசந்தி, மகாலட்சுமி, சுலோச்னா ஆகிய மூன்று பெண்கள், உசிலம்பட்டியை சேர்ந்த சில்லரை கஞ்சா வியாபாரி அரவிந்த்சாமி 32,உட்பட நால்வரையும் தேனி மாவட்ட போதைப் பொருட்கள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் கைது செய்து கஞ்சாவை கைப்பற்றினர்.
ஆந்திராவை சேர்ந்த பெண் கஞ்சா வியாபாரி தமிழ்செல்வி. இவர் தமிழகம் முழுவதும் சில்லரை வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்து வருகிறார். இவர் கூறும் சில்லரை வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ய ரூ.10 ஆயிரம் கூலி வழங்கி பல பெண்களை கஞ்சா சப்ளைக்கு பயன்படுத்தி உள்ளார்.
ஈரோட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்த வசந்தி, மகாலட்சுமி, சுலோச்சனா, உசிலம்பட்டி வியாபாரி அரவிந்த்சாமியிடம் ஆகியோர் 16 கிலோ கஞ்சா சப்ளை செய்ய வந்திருந்தனர். அப்போது ஆண்டிபட்டியில் போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் நால்வரையும் கைது செய்து, 16 கிலோ கஞ்சாவை கைப்பற்றினார்.
இன்ஸ்பெக்டர் கூறுகையில், ஆந்திரா பெண் கஞ்சா வியா பாரி தமிழ்செல்வி ரூ.10 ஆயிரம் என பெண் களுக்கு சம்பளம் வழங்கி கஞ்சாவை தமிழகம் முழுவதும் சில்லரை வியாபாரிகளுக்கு சப்ளை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது,' என்றார்.