/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு வெள்ளத்தால் 179 எக்டேர் பயிர்கள் சேதம்
/
பெரியாறு வெள்ளத்தால் 179 எக்டேர் பயிர்கள் சேதம்
ADDED : நவ 06, 2025 07:10 AM
தேனி: மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் வேளாண் பயிர்கள் 172.6 எக்டேர், தோட்டக்கலை பயிர்கள் சுமார் 7 எக்டேர் என மொத்தம் 179 எக்டேர் சேதமடைந்து, 310 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த அக்., 18,19ல் முல்லைப்பெரியாறு, மூலவைகை, கொட்டக்குடி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் முல்லைப்பெரியாற்றங்கரையில் உள்ள வேளாண் சாகுபடிநிலங்களில் வெள்ள நீர் உட்புகுந்தது. சில இடங்களில் வெள்ள நீர் இரு நாட்களில் வடிந்தது. ஆனால் பல இடங்களில் வெள்ள நீர் வெளியேற வழியின்றி பயிர்கள் சேதமடைந்தன. சேதமடைந்த பயிர்கள் குறித்து வேளாண், தோட்டக்கலை அதிகாரிகள் கணக்கிட்டு வந்தனர்.
கணக்கெடுப்பு பணியை அதற்காக வடிவமைக்கப்பட்ட செயலியில் பதிவேற்றி வந்தனர். அதிகபட்சமாக நெல் 148.3 எக்டேர், மக்காச்சோளம் 6.5 எக்டேர், சோளம் 3.5 எக்டர், பருத்தி 1.4 எக்டேர், சிறுதானியங்கள் 12.12 எக்டேர், கம்பு 0.6 எக்டேர், தோட்டக்கலை பயிர்கள் சுமார் 7 எக்டேர் என மொத்தம் 179 எக்டேர் பயிர்கள் சேதமடைந்தனர். இதனால் 310 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்தனர்.

