/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கடந்த ஓராண்டில் நடந்த சாலை விபத்துக்களில் 183 பேர் மரணம் சாலைபாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் தகவல்

ADDED : ஜூலை 30, 2025 12:23 AM
தேனி : ' மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 2024 ஜூலை முதல் 2025 ஜூன் வரை நடந்த 176 ரோடு விபத்துக்களில் 183 பேர் இறந்துள்ளனர்.
விபத்து பகுதிகளில் வேகத் தடுப்புகள் அமைக்க கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
எஸ்.பி., சினேஹா பிரியா முன்னிலை வகித்தார். கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், 5 சப்டிவிஷன் டி.எஸ்.பிக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் மாவட்டத்தில் நடந்த விபத்துக்கள், விபத்து தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
மெயின் ரோட்டில் தெருக்கள், பிற ரோடுகள் இணைந்தால் இணைப்பு பகுதியில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
அவ்வாறு அமைக்க வேண்டிய பகுதிகள் பற்றி கணக்கெடுப்பு மேற்கொள்ளுங்கள். ஏற்கனவே உள்ள வேக தடுப்புகளில் வெள்ளை கோடுகள் அமைக்க வேண்டும், விபத்துப்பகுதி என குறிக்கப்பட்ட பகுதிகளில் வேகத்தை குறைக்கும் வெள்ளை, மஞ்சள் நிறத்திலான கோடுகள் அமைக்க வேண்டும்.
விபத்துப்பகுதிகளில் சென்டர் மீடியன்கள் தேவைப்பட்டால் அமைக்க அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் நெடுஞ்சாலைத்துறையினர், போலீசாருக்கு அறிவுறுத்தினார்.