/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆக்கிரமிப்பில் இருந்த 20 வீடுகள் அகற்றம்
/
ஆக்கிரமிப்பில் இருந்த 20 வீடுகள் அகற்றம்
ADDED : செப் 04, 2025 11:49 PM

கம்பம்: கம்பத்தில் இருந்து கம்பமெட்டு செல்லும் ரோட்டில் ஆக்கிரமிப்பில் இருந்த 20 வீடுகளை நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று அகற்றினர்.
கம்பத்தில் இருந்து கம்பமெட்டு செல்லும் ரோட்டில் ஒரு கி.மீ. தூரத்திற்கு ரோட்டின் இரு பக்கமும் ஆக்கிரமித்து வீடுகளாகவும் கடைகளாகவும் உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளில் குறிப்பிட்ட சில சர்வே எண்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில் கடந்த 2 மாதங்களில் 2 முறை முயற்சி செய்தும், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை. நெடுஞ்சாலை முழுவதும் சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று காலை நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் வைரவ குமார் தலைமையில போலீஸ் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். பொதுமக்களும் நாம் தமிழர் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் இது கோர்ட் உத்தரவு. நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். இந்த நடவடிக்கையில் 20 வீடுகள் இடிக்கப்பட்டது.