ADDED : பிப் 28, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி காமராஜ் நகர் முதல் தெருவில் வசிப்பவர் முருகேசன்; தனியார் நிறுவனத்தில் ஆடிட்டர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். பிப். 20ல் சென்னையில் உள்ள பிள்ளைகளை பார்க்க மனைவி ஜெயஸ்ரீயுடன் சென்று விட்டார்.
நேற்று முன்தினம் இவரது வீட்டின் கதவு, பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவை உடைத்து லாக்கரில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளி பொருள், ரூ.32 ஆயிரம் என ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை திருடி சென்றனர். ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார் விசாரிக்கின்றனர். இங்கு தொடர் திருட்டால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

