/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பத்தில் 200 கிலோ புகையிலை பறிமுதல்
/
கம்பத்தில் 200 கிலோ புகையிலை பறிமுதல்
ADDED : மார் 15, 2024 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்:தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்ள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
கம்பம் நகர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களிலும் இந்நிலையுள்ளது. சுருளிப்பட்டி அருகே கே.எம்.,பட்டி விலக்கில் தடை செய்யப்பட்ட புகையிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் ராயப்பன்பட்டி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு கண்ணன் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் -200 கிலோ தடை புகையிலை பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்து. அவற்றை பதுக்கிய இருவர் தப்பி விட்டனர்.
புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்த ராயப்பன்பட்டி போலீசார் இதில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

